
இலங்கை தமிழரசு கட்சியின் 75வது தொடக்க விழா இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், கட்சி ஆதரவாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.






