கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று சுகாதார வல்லுநர்கள் கூட்டமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
2021 ஜனவரி 1 முதல் டிசம்பர் வரை மொத்தம் 35,924 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்தனர். ஆனால் இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் இன்று வரை 72,321 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும், பரவலைக் கட்டுப்படுத்த நுளம்புகளின் எண்ணிக்கையைக் குறைப்பது மிகவும் அவசியமானதாக இருந்தாலும் சுகாதார அமைச்சுக்கு மக்களிடமிருந்தும் கிடைத்த பங்களிப்பு மிகக் குறைவு என்று இதன்போது ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
இது கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிக எண்ணிக்கையாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.