
மாத்தறை – தங்காலை பிரதான வீதியில் பயணித்த கார் ஒன்று நேற்று பிற்பகல் வெல்லமடம பகுதியில் வீதியை விட்டு விலகி கடலில் விழுந்துள்ளது.
சாரதியின் தூக்க கலக்கமே விபத்திற்கான காரணமாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
ருஹுனு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரே குறித்த வாகனத்தில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது காலியை வசிப்பிடமாகக் கொண்ட 50 வயதுடைய விரிவுரையாளர் விபத்தில் காயமடைந்த நிலையில் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.