பருத்தித்துறை நகரசபை தவிசாளர் ஜோ.இருதயராசா தனது பதவியை சற்றுமுன் இராஜினாமா செய்துள்ளார்.
கடந்த ஐந்தாம் திகதி கொண்டுவரப்பட்ட 2023 ம் ஆண்டுக்கான வரவு செலவுச் திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் தோற்கடிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் திருத்திய வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றுவதற்க்காக இன்றைய தினம் 9:30மணிக்கு இடம் பெறவிருந்தது
இந்நிலையில் 9:20 மணிக்கு வருகைதந்திருந்த தவிசாளர் சபை செயலாளரிடம் தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்து நகரசபை வாகனத்தில் வெளியேறினார்.
இதனை தொடர்ந்து 9:35 மணியளவில் சபையை கூட்டிய பருத்தித்துறை நகரசபை செயலாளர் தவிசாளர் பதவி விலகியதை சபைக்கு அறிவித்டுடன் அவர் பதவி விலகியது தொடர்பாக வர்த்தமானியில் பிரசுரித்து புதிய தவிசாளர் தெரிவாகும் வரை சபை நடவடிக்கைகள் இடம் பெறாது என அறிவித்திருந்தார்.
குறித்த பதவி விலகல் தொடர்பில் மேலுமவ தெரியவருவதாவது கடந்த 05/12/2023 அன்று வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றும் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்படும் என்று எதிர்பார்க்ப்பட்ட நிலையில் அவரது கட்சியின் உறுப்பினர்களாலும் அவரை பதவி விலகுமாறு கோரியதாகவும் கடசி வரை மறுத்துவந்த ஜோ.இருதயராசா தடீரென பதவி விலகியமை பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் வருட இறுதியில் ஜோ.இருதயராசா பதவி விலகியதால் சபை நடவடிக்கைகள் தம்பிதம் அடையக்கூடியதாக உள்லலதாகவும் தெரிவிக்கப்படுவதுடன் ஜோ.இருதயராசா இன்று பதவி விலகியமை ஒரு பொறுப்பற்ற செயல் என அவரது சொந்த கட்சியினராலேயே விமர்சிக்கப்படுகின்றன.