வவுனியா, பூம்புகார் கல்மடு பகுதியில் மாடுகள் அருந்தும் நீரில் நஞ்சு கலக்கப்பட்டமையால் 15 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், பல மாடுகள் உயிருக்குப் போராடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாடுகள் நேற்று மாலை நீர் அருந்துவதற்காக சென்றுள்ளன. அவை நீர் அருந்தி சிறிது நேரத்தில் படபடவென சரிந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளன. சுமார் 15 மாடுகள் இவ்வாறு அதே இடத்தில் உயிரிழந்துள்ளன.
மேலும் சில மாடுகள் உயிருக்குப் போராடி வருவதுடன் சில மாடுகள் காணாமல்போயுள்ளன.
சம்பவம் தொடர்பாக மாடுகளின் உரிமையாளர் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
மாடுகள் அருந்திய நீரில் விசம் கலந்ததாகச் சந்தேகிக்கப்படும் நபர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.