இலங்கை முதல் உதவிச் சங்கம் ஸ்தாபகர், அமரர் தம்பு நாகேந்திரம் போஜன் அவர்களின் நினைவேந்தல்…!

இலங்கை முதல் உதவிச் சங்கம், மற்றும்  இந்து சமயத் தொண்டர் சபை ஸ்தாபகரும், பிரதம ஆணையாளருமாகிய அமரர் தம்பு நாகேந்திரம் போஜன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு கிளி/பிரமந்தனாறு மகா வித்தியாலயத்தில் இலங்கை முதல் உதவிச் சங்கம் இந்து சமயத் தொண்டர் சபை தலைமைச் செயலகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்டு, பாடசாலை அதிபரும்,  இலங்கை முதல் உதவிச்சங்கம், இந்து சமயத் தொண்டர் சபையின் பாடசாலைப் பிரிவு தலைவருமாகிய தெய்வராசா தலைமையில் 16.12.2022 அன்று  வெள்ளிக்கிழமை மதியம் 12. 30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

இதன் முதல்  நிகழ்வாக தொண்டர் சபையினரின் அணிவகுப்பு மரியாதை, சத்தியப்பிரமாணத்தை தொடர்ந்து நினைவுச்சுடரினை அதிபர் தெய்வராசா ஏற்றிவைக்க இலங்கை முதல் உதவிச் சங்கம் இந்து சமயத் தொண்டர் சபை தேசிய ஆணையாளர் .வை.மோகனதாஸ், மகளீர் பொறுப்பாசிரியர் திருமதி. ச. கேதீஸ்வரி, தேசிய கண்காணிப்பாளர் ஜெகதாஸ், யாழ் பல்க கைகக்கழக விவுரையாளர், கி.கமலேஸ்வரன் பிரிவுப் பொறுப்பாளர்கள், மாணவர்கள், அறநெறி பாடசாலை பொறுப்பாளர் ஏற்றியதைத் தொடர்ந்து மலர்மாலையினை பாடசாலை அதிபர், தேசிய ஆணையாளர், தேசிய கண்காணிப்பாளர் அணிவித்ததினைத் தொடர்ந்து மலர்வணக்கம்,  அகவணக்கம், என்பன இடம்பெற்றதுடன்  தொடர்ந்து நினைவுரைகள் இடம்பெற்றன.

அத்துடன் 2021ம் ஆண்டு க.பொ.த ( சா/த) பரீட்சையில் சித்தி பெற்று க.பொ.த (உ/த) கற்பதற்கு தகுதிபெற்ற. தொண்டர் சபை உறுப்பினர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும்  இடம்பெற்றதுடன்  அவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டதுடன் சக தொண்டர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

மேலும் போஜன் அவர்கள்  நினைவாக 11 தென்னம்பிள்ளைகள் பாடசாலை வளாகத்தில் தொண்டர்களால் நாட்டிவைக்கப்பட்டன.

 

Recommended For You

About the Author: Editor Elukainews