
யாழ்ப்பாணம் வடமராட்சி – குடாரப்பு பகுதியிலுள்ள கடற்கரையோரத்தில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று புதன்கிழமை(21) பகல் வேளை சடலம் கரையொதுங்கியது.
சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த சடலம் மீனவர்களுடையதா அல்லது
விபத்துக்களில் ஏற்பட்ட உயிரிழப்பா
என்பது தொடர்பில் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது