போதைப்பொருள் – சிறைவைக்கப்பட்டுள்ள மாணவர் தொடர்பில் அதிர்ச்சி தகவல்

இலங்கையில் போதைப்பொருள் பாவனை அண்மைக்காலமாக அதிகரித்து செல்வதாக இன்டர்போல் உட்பட பல்வேறு தரப்பினரும் குரல் எழுப்பி வருகின்றனர்.

குறிப்பாக மாணவர்களை இலக்கு வைத்து அண்மைக்காலமாக போதைப்பொருள் விற்பனை மும்முரமாக இடம்பெற்று வருகிறது. இதனால் மாணவர்களின் புத்தகபைகளை சோதனையிடும் நடடிவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் போதைப்பொருள் பயன்படுத்தி சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சாதாரண மற்றும் உயர்தர மாணவர்களின் எண்ணிக்கை ஐந்தாயிரமாக அதிகரித்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் மேலதிக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் சந்தன ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு பாடசாலைக்கு செல்லாத சுமார் 600 பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது 2021 இல் 190 ஆகக் குறைந்துள்ளது என அவர் கூறியுள்ளார்.

இருப்பினும், சாதாரண மற்றும் உயர்தர மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். 2015ல் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 2,000 ஆக இருந்ததுடன் 2021 ஆம் ஆண்டு ஆகும் போது 5000 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன், 2020ஆம் ஆண்டு 22 பட்டதாரிகள் போதைப்பொருள் பயன்படுத்தியதற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews