சீனாவிடமிருந்து நன்கொடையாக கிடைத்துள்ள எரிபொருளை ஒரு ஹெக்டயருக்கும் குறைந்த நெல் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு இலவசமாக வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதிபர் ரணில் விக்ரமசிங்க விடுத்திருந்த வேண்டுகோளுக்கிணங்க சீன அரசாங்கம் இலங்கைக்கு 10.06 மில்லியன் லீற்றர் எரிபொருளை நன்கொடையாக வழங்கியுள்ளது.
இதில் 6.98 மில்லியன் லீற்றர் எரிபொருளை நாட்டில் நெற் பயிர்ச்செய்கையில் ஈடுபட் டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணமாக பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரி வித்துள்ளார்.
விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு மீதமாகும் எரிபொருளை நாட்டிலுள்ள மீனவர் சமூகத்திற்கு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் எரிபொருள் பகிர்ந்தளிப்பு நடவடிக்கைகள் அந்தந்த மாவட்டங்களிலுள்ள தெரிவுசெய்யப்பட்ட பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிலையங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார