மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கூளாவடி பிரதேசத்தில் நகைக்கடை ஒன்றை உடைத்து வெள்ளி நகைகளை கொள்ளையிட்ட இருவரை எதிர்வரும் ஜனவரி 4 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ரி.தியாகேஸ்வரன் நேற்று வியாழக்கிழமை (22) உத்தரவிட்டார்.
குறித்த பகுதியிலுள்ள நகைக்கடை உரிமையாள் கடந்த 17ம் திகதி இரவு கடையை பூட்டிவிட்டு போரதீவுpல் அவரது தாயார் வீட்டிற்கு சென்று 19ம் திகதி இரவு திரும்பிவந்து கடையை திறந்தபோது கடை உடைத்து கொள்ளையடிக்ப்பட்டதையடுத்து 20 ம்திகதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
இதனையடுத்து பொலிசார் மேப்பநாயுடன்; தடவியல் பிரிவினர் தேடுதல் நடவடிக்கையினை இடுபட்டநிலையில் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிரி கமராவில் வீடியோவில் பதிவாகியிருந்த கொள்ளையனை அடையாம் கண்டு கொண்ட பொலிசார் அந்த பிரதேசத்தைச் சேர்ந்த கொள்ளையர் இருவரை கைது செய்ததுடன் கொள்ளையடிக்கப்பட்ட 75 ஆயிரம் ரூபா பெறுமதியான வெள்ளி நகைகளை மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்களை நேற்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ரி.தியாகேஸ்வரன் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது அவர்களை எதிர்வரும் 4 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.