
இராணுவத்தின் 551 வது படைப்பிரிவினரால் வடமராட்சி கிறிஸ்தவ ஒன்றியமஸ இணைந்து இராணுவ அனுசரணையில் இன்று பிற்பகல் 6:30 மணியளவில் ஒளிவிழா இடம் பெற்றுள்ளது.

பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி விழா மண்டபத்தில் இடம் பெற்ற இந்நிகழ்வில் விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு விழா மண்டபத்திற்க்குள் வரவேற்கப்பட்டு அங்கு முதலாவதாக மங்கல விளக்கு ஏற்றப்பட்டது.
மங்கல விளக்குகளை அருட்தந்தையர்கள், சிவாச்சாரியார், மௌலவி மற்றும் நிகழ்வின்பிரதம விருந்தினரும் 55 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல்
பிரசன்ன குணரத்ன, சிறப்பு விருந்தினர்களாக பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் ச.அரியகுமார, முன்னாள் பருத்தித்துறை நகரசபை தவிசாளர் ஜோ.இருதயராசா, உப பொலீஸ் அத்தியட்சகர் சந்திம இத்துமால் கொட, பருத்தித்துறை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமை பொலீஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க, வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் ஆழ்வாப்பிள்ளை சிறி, வடமராட்சி வலயக் கல்வி பணிப்பாளர் சத்தியபாலன் மற்றும் விருந்தினர்கள் ஏற்றிவைத்தனர்.
அதனை தொடர்ந்து வரவேற்பு நடனம், பாடல்கள், உரைகள் என்பன இடம் பெற்றன.
அருட்தந்தையர்கள், சிவாச்சாரியார், மௌலவி 55 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன, சிறப்பு பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் ச.அரியகுமார, முன்னாள் பருத்தித்துறை நகரசபை தவிசாளர் ஜோ.இருதயராசா, உப பொலீஸ் அத்தியட்சகர் சந்திம இத்துமால் கொட, பருத்தித்துறை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமை பொலீஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க, வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் ஆழ்வாப்பிள்ளை சிறி, வடமராட்சி வலயக் கல்வி பணிப்பாளர் சத்தியபாலன் மற்றும் அருட்சகோதரிகள் இராணுவ அதிகாரிகள், மாணவர்கள், மக்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.





