
கிளிநொச்சி மாவட்ட போராளிகள் நலன்புரி சங்கதின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று பகல் 1 மணியளவில் கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டங்களில் குறித்த சங்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று கிளிநொச்சியில்
போராளிகள் நலன்புரி சங்கதின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்தன் விளக்கவுரையாற்றினார். தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில் மத தலைவர்கள், அமைப்புக்களின் பிரதிநிதிகள், கல்வியலாளர்கள், முன்னாள் போராளிகள் என பலர் கலந்துகொண்டனர்.










