
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கையின் புதிய வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸுக்கு பாராட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்திய உயர்ஸ்தானிகராலயம் இது தொடர்பில் ட்வீட் செய்துள்ளது.
அந்த ட்வீட்டின் படி, இருதரப்பு உறவுக்கு வழிகாட்டும் சிறந்த அயலுறவு,நட்புறவின் முக்கியத்துவம் மற்றும் தலைமைத்துவத்தின் இலக்குக்கு அமைவாக அவருடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.