இன்று ஆழிப்பேரலை கோரத் தாண்டவமாடி 18 ஆண்டுகள் ஆகுகின்றன.
கட்ந்த 26/12/2022. அன்று உலகின் தென்கிழக்கு ஆசிய நாடுகள் 13 ஐ ஆழிப்பேரலை எனும் கடல் கோள் அலையினால் மக்கள் காவுகொள்ளப்பட்டு 18ஆண்டுகள் நிறைவடைகின்றது.
இந்தோனேசியாவில் சுமத்திராதீவில் பூமி அதிரதவு ஏற்பட்டு அதன் விளைவாக சுற்றியுள்ள நாடுகளைத்தாக்கியது. இலங்கையில் உள்ள மாவட்டங்களிலும் உள்ள 17 கரையோரமாவட்டங்களில் 11 மாவட்டங்களை நேரடியாகவும் 1மாவட்டம்(கிளிநொச்சி) மறைமுகமாகவும் தாக்கி 26777 உயிர்களை காவுகொண்டது.
9 மாகாணங்களில் 4 மாகாணங்களில் இதன் தாக்கம் இருந்தது. குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களே அதிகமான சொத்தழிவுகளையும், உயிரிழப்புக்களையும் சந்தித்தது. குறிப்பாக வடக்கு கிழக்கில் 17200 உயிரிழந்தும் 30ஆயிரத்துக்கு மேற்பட்டோர் காயமடைந்தும் இருந்தனர். அந்தவகையில் இலங்கையில் அதிகளவான மக்கள் உயிரிழந்த மாவட்டமாகவும் அம்பாறை பதிவுசெய்யப்பட்டுள்ளது. 9051 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் நாவலடி என்னும் ஒருகிராமம் முற்றாக கடலால் மூடி அழிந்து போயுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2975பேர் உயிரிழந்தனர். திருகோணமலை மாவட்டம் உயர்ந்த நிலப்பிரதேசமாகையினால் அந்தமாவட்டத்தில் உயிரிழப்பு சற்றுக் குறைவாகவே காணப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் 984 பேர் உயிரிழந்தனர். முல்லைத்தீவு மாவட்டத்திலும் அதிகளவான உயிரிழப்புக்களை சந்தித்துள்ளது. 2902 பேர் உயிரிழந்தனர்.
கிளிநொச்சிமாவட்டம் ஆழிப்பேரலையில் நேரடியாகப்பாதிக்கப்படவில்லை எனினும் மறைமுகமாக அதாவது தொழில் நிமிர்த்தமும், உறவினர்களின் வீடுகளுக்கும், முல்லைத்தீவுக்கும், யாழ்ப்பாணத்தின் வடமராட்சி கிழக்குப் பிரதேசங்களுக்கும் சென்றிருந்தவர்களில் 32 பேர் உயிரிழந்திருந்தனர். யாழ்ப்பாணமாவட்டத்தில் வடமராட்சிகிழக்கு பிரதேச செயலக பிரிவு மட்டுமே முற்றகா பாதிக்கப்பட்டது. சுண்டிக்குளம் தொடக்கம் மணற்காடு வரையான கரையோரப்பிரதேசம் முழுவது அழிவடைந்தது 1256 பேர் உயிரிழந்தனர். இதில் 1250பேர் வடமராட்சிகிழக்கைச்சேர்ந்தோர் . மிகுதி 6 பேர்தான் மற்றைய பிரதேசங்களைச்சேர்ந்தோர் .
ஆழிப்பேரலையின்தாக்கம் யாழ்ப்பாணம் கீரிமலைவரையிருந்து பருத்தித்துறைதொடக்கம் கீரிமலைவரையான கடல்ப்பகுதியானது பார் (கல்லுகள்) நிறைந்த கடலும் கரையிலும் தடுப்பு சுவர்கள் உள்ள பகுதி என்பதும் இதன் பாதிப்பிலிருந்த தடுத்தது.
இலங்கையின் தென் மாகாணத்தில் உள்ள அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஆழிப்பேரலையினால் 4500பேரும், காலிமாவட்டத்தில் ஆழிப்பேரலையினால் 3774பேரும், மாத்தறைமாவட்டத்தி ல் ஆழிப்பேரலையினால் 1061பேரும் களுத்துறைமாவட்டத்தில் 170 பேரும் மேல் மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்தில் 65பேரும் கம்பஹா(நீர்கொழும்பு) மாவட்டத்தில் ஆழிப்பேரலையினால் 07பேரும் உயிரிழந்துள்ளனர்.
இந்தோனேஷியா சுமத்தீரதீவில் 26/12/2004 காலை 6.58மணிக்கு ஏற்பட்ட ஆழிப்பேரலை இலங்கையின் அம்பாறைகரையை காலை 8.30 மணிக்கு தாக்கியது. அலையின் உயரம் 7.12 மீட்டராக காணப்பட்டுள்ளதாகவும், மட்டக்களப்பில் காலை 8.40 மணியளவிலும் அலையின் உயரம் 6.10 M. திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் காலை 8.50 மணியளவிலும், அலையின் உயரம் 5.8 M யாழ்ப்பாணத்தில் காலை 9.00மணியளவிலிம்ண அலையின் உயரம் 3.5 M. அதே நேரம் அம்பாந்தோட்டையில் காலை 8.50மணியளவில் தாக்கியஅலையின் உயரம் 7.9 M. மாத்தறையில் காலை 9.00மணியளவில் தாக்கியது.
அலையின் உயரம் 7.9 M
காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் காலை 9.15மணியளவில் தாக்குயுள்ளது. அலையின் உயரம் 4.9 M கொழும்புமாவட்டத்தில் காலை 9.20 மணியளவில் தாக்கியுள்ளது. அங்கு அலையின் உயரம் 4.5 M கம்பஹா(நீர்கொழும்பு) மாவட்டத்தில் காலை 9.30மணியளவில் தாக்கியது அலையின் உயரம் 2 M
இவ் ஆழிப்பேரலையின் கோரத் தாண்டவத்தால் இலங்கையில் 35530பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் வடக்கு கிழக்கிலேயே அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்
யுத்தத்தால் தமது உயிர்கள் சொத்துக்கள் எல்லாவற்றையும், இழந்த வடக்கு குழக்கு மக்கள் ஆழிப்பேரைலையின்போதும் அனைத்தையும் இழந்தனர்.
இயற்கையும் ஒரு இனத்தை அழிக்க ஏன் முடிவு செய்தது. அவ் அழிவின் பதினெட்டாம் ஆண்டில்நாமும் நினைவு கூர்வோம்.