தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனாவுக்கு பின்னர் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக இலங்கையில் 5ஜி (5G) வலையமைப்பை பயன்படுத்துவது குறைந்தது ஒரு வருடமாவது தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெலிகொம் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி திருகுமார் நடராசாவின் கருத்துப்படி, 5ஜி நெட்வொர்க்கை (வலைமைப்பை)பயன்படுத்துவதற்கு 4ஜி நெட்வொர்க்கை பயன்படுத்துவதற்கான செலவை விட இரண்டு மடங்கு செலவாகும் என்று கூறியுள்ளார்.
எனவே தற்போது நாடு இருக்கும் நிலையில், இதனை நடைமுறைப்படுத்த குறைந்தது ஒரு வருடமாவது தாமதமாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
முன்னர் 2ஜி மற்றும் 4ஜி வலையமைப்புக்கள் பெரிய விஷயமாகப் பேசப்பட்டன. இந்தநிலையில் 5ஜி என்பது அடிப்படையில் 4ஜியின் இன் மற்றொரு மேம்பட்ட பதிப்பாகும்.
இது நுகர்வோருக்கு அதிக திறனை வழங்குகிறது என்று திருக்குமார் நடராசா மேலும் தெரிவித்தார்.