அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் நாடு பூராகவும் தேசிய பாதுகாப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில்
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் தேசிய பாதுகாப்பு தினம் முன்னெடுக்கப்பட்டது
முறையான விழிப்புணர்வுடன் விழிப்பாக இருப்பதன் மூலம் அனர்த்த அபாயத்தை குறைத்துக்கொள்வோம் எனும் தொனிப் பொருளின் கீழ் இன்றைய தினம் தேசிய பாதுகாப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டது,
தேசிய கொடி ஏற்றலோடு ஆரம்பமாகிய தேசிய பாதுகாப்பு தின நிகழ்வில் 2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தின் போது உயிரிழந்த உறவுகளுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது
மும்மத தலைவர்களின் ஆசியுரையோடு இடம்பெற்ற நிகழ்வில் காலை 9.05 மணிக்குஇதுவரை காலமும் இயற்கை அனர்த்தத்தில் உயிரிழந்த பொதுமக்களுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் சூரியராஜ் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மேலதிக அரசாங்க அதிபர் மாவட்ட செயலக அதிகாரிகள்.உத்தியோகத்தர்கள்கலந்துகொண்டனர்,