
யாழ்ப்பாணம்,கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு இடம் மாற்றம் என ஊடகங்களில் செய்தி வெளிவந்துள்ள நிலையில் குறித்த விடயம்தொடர்பில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடம் வினவிய போது தனக்கு எழுத்து மூலமாக இடமாற்றம்
தொடர்பில் அறிவிக்கப்படவில்லை எனவும் எனினும் இந்த வருடத்தோடு ஓய்வு பெறுபவர்களின் இடங்களுக்கு புதிதாக நியமிக்கப்படவேண்டியவர்களின் பட்டியல் ஒன்று தயாரிக்கப்படுகின்றது உள்நாட்டுஅலுவல்கள் அமைச்சினால் அந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது எங்களது பெயர்களும்அந்த பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறதே தவிர எனக்கு இடமாற்றல் தொடர்பில் எழுத்து மூலமாக அறிவிப்பு எதுவும் கிடைக்கவில்லை என, தெரிவித்தார்