
வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சுனாமி நினைவிடத்தில் சுனாமி 18 வது நினைவேந்தல் கண்ணீர் மல்க இன்று இடம் பெற்றுள்ளது.
கட்டைக்காடு சென்மேரிஸ் கடற்றொழிலாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் தலைமையில் இடம் பெற்ற இந் நினைவேந்தலில் மருதங்கேணி பங்குத்தந்தையின் அமல்ராஜ் அடிகளாரால் இரங்கல் உரை நிகழ்த்தினார் இதில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ச.சுகிர்தன் சுடரேற்றி அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்துவைத்தார். அதனை தொடர்ந்து கட்டைக்காடு பங்கு மக்கள் மருதங்கேணி பொலிஸ் அதிகாரிகள் இராணு அதிகாரிகள் மக்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

