
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு ஆழியவளை சி.சி.த.க.பாடசாலை 2005 ம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் அணியின் ஏற்பாட்டில் சுனாமி நினைவுநாளில் உடுத்துறை ஆரம்ப பாடசாலையில் இரத்ததான முகாம் ஒன்று இன்று காலை 10 மணியளவில் நடாத்தப்பட்டுள்ளது.
இதில் சுனாமியில் தமது உறவுகளை இழந்த உறவுகள் இன்று இரத்ததானம் வழங்கினர்.
இதில் குருதியினை கிளிநொச்சி மாவட்ட வைத்திய சாலை இரத்த வங்கி பிரிவினர் பெற்றுக் கொண்டனர்.




