இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் இருந்து வெளிவரும் செய்திகளில் ஆட்கொல்லி போதைப் பொருள் பாவனைகள் குறித்த செய்திகள் தற்பொழுது அதிகமாக உள்ளது. இந்த செய்திகள் ஒரு சமுதாயத்தை மையமாக கொண்ட பார்வையில் ஆரோக்கியமானதாக தெரியவில்லை. இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழ் பேசும் சமுதாயம் மிக பாரிய நிட்சயமற்ற எதிர் காலத்தை நோக்கி செல்வதாகவே நோக்க தோன்றுகிறது.
செய்திகளில் காணப்படும் ஆட்கொல்லி போதைப் பொருட்களும் அவற்றின் பெயர்களும் அவற்றின் பாவனையும் தனிமனித அளவில் பெரும் உடல் ஆரோக்கிய சீர்கேடுகளை உருவாக்க வல்லன. எதிர்கால சமுதாயத்தையே சித்தப்பிரம்மையற்ற, நிலை அற்ற இடத்திற்கு கொண்டு சென்று விட வல்லன. மருத்தவ ரீதியான பல ஆய்வு அறிக்கைகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த வஸ்துக்கள் பின்வரும் விளைவுகளை
ஏற்படுத்தகிறது.
திடீரென நரம்புகளை புடைக்க செய்வதால் அதீத வன்முறையை தூண்டுகிறது, பாலியல் பலாற்காரம், கொலை போண்ற மிக கடுமையான விளைவுகளை ஏற்படுத்தவதற்கு பல போதைப் பொருட்கள் காரணமாக உள்ளதன. தோல் சொறிவு, பிறாண்டுதல் போண்ற உணர்வுகளை தூண்டுகிறது இதையதுடிப்பை மிக அதிகமாக்குதல் வாய் காய்ந்த நிலை போன்ற விளைவுகளை ஏற்படுத்த வல்லது.
இது தவிர நித்திரை அற்றநிலை பல நாட்களுக்கு நீடிக்கும். அதிகரித்த தலைவலி, சித்தப்பிரம்மை, மாயப்பிரம்மை, தொல்லை கொண்ட மனோநிலை, கவலை உணர்வு ஆகியவற்றை உருவாக்க வல்லது என இந்த ஆட்கொல்லி போதை பொருட்கள் பற்றிய மருத்துவ குறிப்புகள் கூறு கிண்றன.
குறிப்பாக ஐஸ் என்று அழைக்ககூடிய பொருள் மிகவும் கொடூரமான பின்விளைவுகளை மிக நீண்ட காலத்திற்கு மனித உடலில் ஏற்படுத்த வல்லது. இதயப் படபடப்பு, மூச்சு வாங்கல், வலிப்பு, கட்டுபடுத்த முடியாத உடல் நடுக்கம், மனக்குழப்பம், மனஎரிச்சல், சடுதியான திடீர்தலை வலி போன்ற பின் விளைவுகளை நீண்ட காலத்திற்கு ஏற்படுத்த வல்லது. இந்த குறிப்பகள் அவுஸ்திரேலிய அரசின் சுகாதார திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் காணப்படுகிறது.
இத்தகைய கொடிய வஸ்துக்கள் எவ்வாறு பொது மக்கள் கைகளுக்கு கிடைக்கிறது என்பது தான் இங்கே முக்கியமானதாகும். ஏனெனில் ஒரு தனி மனிதர் அவர் வாழும் அரசுக்கு எதிராக ஒரு செயற்பாட்டில் உள்ளார் என்று இனம் காணும் பொழுது மிக கொடுமையான மனித உரிமைகளுக்கு அப்பாட்பட்ட வகையில் நடவடிக்கையை எடுக்கும் ஒரு அரசாங்கம் ஆட்கொல்லி போதை வஸ்து விவகாரங்களில் சற்று நெகிழ்வுப்போக்கை கொண்டிருக்கிண்றன. என்பது பல சர்வதேசஅளவிலான ஆய்வாளர்களின் பார்வையாகும்.
உலகில் ஒரு சில விரல் விட்டு எண்ண கூடிய நாடுகளே போதைப் பொருட்கள் மீது கடுமையான சட்டங்களை கொண்டுள்ளன. அதேவேளை அதிகாரிகளால் கண்டு பிடிக்கப்பட்ட ஆட்கொல்லி போதைப் பொருட்களுக்கு விசாரனையின் பின் என்ன ஆனது என்பது பல இடங்களில் தெரிய வருவதில்லை.
ஐக்கிய நாடுகள் சபையின் போதைபொருள் குற்றங்கள் அலுவலகத்தால் கடந்த ஜுன்மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில் உலகின் கிழக்கு, தென்கிழக்கு நாடுகளில் செயற்கையாக செய்யபட்ட போதைப் பொருட்களின் கடத்தல் 2021ஆம் ஆண்டு முன்னெப்பொழுதும் இல்லாத அதிகரித்த அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு உள்ளது. தங்க முக்கோண வலைய நாடுகள் என்று குறிப்பிட கூடிய லாவோஸ் மியான்மர் தாய்லாந்து
போன்ற நாடுகள் இணையும் பகுதிகளில் மிகக்கடுமையான ஆட்கொல்லி போதை பொருட்களின் கடத்தல் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டு உள்ளது.
ஐஸ் என்று சுருக்கமாக அழைக்கப்படும் வஸ்து கண்ணாடி கற்களாகவும் குளிசைகளாகவும் கடத்தப்படுகிறது. கடந்த வருடம் மட்டும் 172 தொண் எடை உள்ள இந்த பொருட்கள்பிடிக்கப்பட்டன. இருந்த போதிலும் ஏராளமானவை மீகொங் நதி ஊடாக கடத்தப்பட்டு இந்தோநீசியா மலேசியா தாய்லாந்த பிலிப்பைன்ஸ் அவுஸ்திரேலியா நியூசிலாந்த போன்ற நாடுகளுக்கு மட்டுமல்லாது வடமேற்கே இந்திய மானிலங்கள் ஊடாக இதர பல உலக பிராந்தியங்களுக்கும் கொண்டு செல்லப்படுகிண்றன.
மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த கடத்தல் வணிகம் வளர்ந்து கொள்வதற்கு தேவையான வர்த்தக வலை அமைப்பும். அத்தனை தயாரிப்பதற்கு தேவையான இரசாயண மூலப் பொருட்களும் தென்கிழக்கு ஆசியாவில் கிடைக்கிறது. தயாரிக்கபட்ட பொருட்களை நகர்த்துவதற்கான தொடர்பாடல்களும், உறவு நிலைகளும், இறுதியாக இந்த பொருட்களை கொள்வனவு செய்யகூடிய சக்திகொண்ட மக்கட் தொகையும் உலகலாவிய அளவில் உள்ளது.
ஆனால் முக்கியமான விடையம் என்னவெனில் இது ஒரு சட்டத்திற்கு புறம்பான தொழில் என்பது தான். அவ்வாறாயின் பல நாடுகளின் சட்ட விதிகளையும் கடந்து எவ்வாறு இது இலங்கையின் வடக்கு கிழக்கு உட்பட உலகின் பல் வேறு இடங்களையும் சென்று அடைகிண்றது என்பது தான் கேழ்விக்கு உரிய விடையமாகும்.
வரலாற்றிலே போதை பல்வேறு தேசங்களின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்திருக்கிறது. அதேபோல போதைப் பொருட்கள் யுத்தங்களில் வெற்றி கொள்வதற்கான ஆயுதமாக பயன் படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு உதாரணமாக ரோமானிய பேரரசு காலத்தில் பிரான்சியர்களை வெற்றி கொள்ள ரோமானிய படைகள் பிரான்சில் மது பழக்கத்தை அறிமுகப்படுத்தினர். அமெரிக்க விடுதலைப் போராட்டத்தில் பிரித்தானிய தேயிலைக்கு தாம்
அடிமைப்பட்டு போகாத வகையில் பொஸ்ரன் துறைமுகத்தில் தேயிலையை கொட்டினர். சீனாவிற்குள் ஓபியம் விற்பனை செய்வதற்காக பிரித்தானியா சீனாவுடன் யுத்தம் செய்தது.
மேலும் இரண்டாம் உலகபோர் காலத்தில் நாசி படையினர் இரா பகல் பாராது நித்திரை விழித்து பொர் செய்வதற்காக போரில் போதைப் பொருட்களை உபயோகப்படுத்தினர். பனிப் போர் காலத்தில் வியட்நாம் கம்போடியா போன்ற கம்யூனிச பரவலை அதிகம் கொண்ட தென் கிழக்காசிய நாடுகளில் அமெரிக்கப்படைகள் போதைப் பொருள் பரவுவதை கண்டும் காணாது விட்டிருந்தன. கொலம்பியாவில் கடந்த காலங்களில் அரசும், போராட்டகாரர்களும் தமது செலவுகளை போதைப் பொருள் விற்பனை மூலமே பெற்று கொண்டனர்.
இவ்வாறு போதைப் பொருள் ஒரு தேசத்திற்குளோ அல்லது ஒரு நிறுவனத்தின் உள்ளோ பிளக்கதில் உள்ளது என்றால் அதற்கு அரசியல் காரணங்களும் உள்ளன என்பதையே போதைப் பொருள் குறித்த வரலாற்று நிகழ்வுகள் கூறி நிற்கிண்றன.
தற்காலத்தில் போதைப் பொருள் ஒரு யுத்த ஆயுதமாக பயன் படுத்தப்படுவதாகவே அதிகமான இடங்களில் காணப்படுகிறது என்று போதைப் பொருள்களும் யுத்தங்களும் என்ற தலைப்பில் வெளிவந்தள்ள வருடாந்த அறிக்கைகள் என்ற இனையத்தள ஆய்வு குறிப்பிடுகிறது. இதிலே ஆட்கொல்லி போதைபொருட்கள் இன்று ஒரு கலப்பு யுத்தத்தின் பிரதான கருவியாக இருப்பது மிக வெளிப்படையாக தெரிகிறது என்ற குறிப்பிட பட்டு உள்ளது.
இங்கே கலப்பு யுத்தம் என்பது ஒரு தேசத்ததுடன் இன்னும் ஒரு தேசம் யுத்தம் செய்யும் பொழுது நேரடியாக ஆயுதம் கொண்டு ஆக்கிரமிப்பு யுத்தம் செய்வதிலும் பார்க்க அந்த தேசத்தின் உள் ஆட் கொல்லி போதை பொருட்கள், விபச்சாரம். கேளிக்கைகள் போன்றவற்றை அதிக அளவில் அனுமதிப்பதன் மூலம் அந்த தேசத்தை சீர் அழித்து சித்தபிரம்மை இல்லாது செய்து விடுவதன் மூலம் இலகுவாக வெற்றி கொள்ளும் தந்திரமாகும்.
இதற்கு தாய்லாந்து நாட்டின் நடைமுறை நிலையை பலரும் உதாரணமாக எடுத்து கூறுவர். அதாவது தாய்லாந்தில் இருக்கும் மன்னர் ஆட்சி முறைமைக்கு எதிராக அங்கு போராட்டங்கள் செய்யும் தரப்பினருடன் மக்கள் இணைந்து செல்லாத வகையில் அனைத்து வகை சமூக கலாச்சார சீர் கேடுகளும் இலகுவாக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த வகையில் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியில் தமிழ் சமுதாயத்தின் மத்தியில் ஆட்கொல்லி போதைப் பொருட்களை பரவ விடுவதன் ஊடாக சமூக பொருளாதார கலாச்சார இருப்பையும் அதன் வளர்ச்சியையும் சீர் குலைப்பதில் யாருக்கு அதிக ஆர்வம் உள்ளது என்பதை வாசகர்களே தெரிந்து கொள்ளும் வகையில் இங்கே விடப்படுகிறது.