தினமும் பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்ட வாழ்க்கை முறைக்கு மக்கள் மாறிக் கொள்ள வேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மின் கட்டணத்தை உயர்த்த கூடாது என்றால் நாளாந்த மின்வெட்டை மக்கள் எதிர்நோக்க வேண்டும்.
அதன்படி தினமும் பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்ட வாழ்க்கை முறைக்கு மக்கள் மாறிக் கொள்ள வேண்டியிருக்கும்.
இதேவேளை எதிர்வரும் ஜனவரி மாதம் 5, 9 மற்றும் 13ஆம் திகதிகளில் 3 நிலக்கரி கப்பல்கள் இலங்கையை வந்தடையவுள்ளன.
இலங்கைக்கான புதிய நிலக்கரி விநியோகத்திற்கான டெண்டர் சட்டமா அதிபரின் பரிந்துரைகளை பெற்ற பின்னர் இந்தோனேசிய நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.