அதிக உணவுப் பணவீக்கம் கொண்ட நாடுகளின் பட்டியல் – இலங்கை 7ஆவது இடத்தில்

உலக வங்கியின் அண்மைய தரப்படுத்தலுக்கமைய அதிக உணவுப் பணவீக்கம் கொண்ட முதல் 10 நாடுகளில் இலங்கை 7ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

அதற்கமைய இலங்கையில் உணவுப் பணவீக்கம் 74 சதவீதமாகக் காணப்படுவதாக உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

உணவுப் பணவீக்கம் அதிகமுள்ள நாடுகளில் சிம்பாபே 321 சதவீதத்துடன் முதலாவது இடத்தில் காணப்படுகிறது.

லெபனான் இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்திலுள்ளதுடன், அங்கு உணவுப் பணவீக்கம் 203 சதவீதமாகக் காணப்படுகிறது.

இதே போன்று வெனிசுலா மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளதுடன், உணவுப் பணவீக்கம் 158 சதவீதமாகக் காணப்படுகிறது.

நான்காவது இடத்தில் துருக்கியும் ஐந்தாம் இடத்தில் ஆர்ஜன்டீனாவும், ஆறாவது இடத்தில் ஈரானும் 7ஆவது இடத்தில் இலங்கையும், எட்டாவது இடத்தில் ருவாண்டாவும் காணப்படுகின்றது.

ருவாண்டாவில் உணவுப் பணவீக்கம் 65 சதவீதமாகக் காணப்படுகின்றது. ஒன்பதாவது இடத்தில் தென் அமெரிக்க நாடான சுரினாம் காணப்படுவதுடன், ஹங்கேரி 44 சதவீத உணவுப் பணவீக்கத்துடன் 10ஆவது இடத்தில் காணப்படுகின்றது.

உணவுப் பணவீக்கமானது உலகம் முழுவதும் அதிகரித்துள்ளதாக உலக வங்கி கூறியுள்ளது.

குறைந்த வருமானம் மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் 88.2 சதவீத உணவுப் பணவீக்கம் காணப்படுவதாக கூறப்படுகிறது.

ஆபிரிக்கா, வட அமெரிக்கா, லத்தின் அமெரிக்கா, தெற்கு ஆசியா, ஐரோப்பா, மற்றும் மத்திய ஆசிய நாடுகள் அதிகமான பாதிக்கப்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews