பிரபல வர்த்தகர் தினேஸ் ஷாப்டர், பொரளை மயானத்திலிருந்து மீட்கப்பட்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, மூளைச் சாவடைந்து காணப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தினேஸ் ஷாப்டரின் மரணம் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதக் கொலை மற்றும் திட்டமிட்ட குற்றங்கள் விசாரணைப்பிரிவு தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், ஷாப்டரின் மனைவி மற்றும் மாமியாரிடம் நேற்றைய தினம் மீளவும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.