
”புதிய அமைச்சரவை நியமனம் பற்றி நான் எதுவும் பேசமாட்டேன் எனவும் தலையிடவும் மாட்டேன்” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் முன்னாள் பிரதமரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ச கருத்து தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணிலுக்கும், மகிந்தவுக்கும் இடையில் கடந்த வாரம் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அதில் இருவரும் தற்போதைய அரசியல், பொருளாதார விடங்கள் பற்றி கலந்துரையாடியுள்ளனர்.
குறித்த சந்திப்பில் புதிய அமைச்சரவை நியமனம் பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.