அக்கரைப்பற்று நீதிமன்றத்தற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பாக யாழ் ஆவா குறுப்புடன் இயங்கி வந்த ஒருவர் உட்பட 3 பேர் ஹரோயினுடன் கைது

அக்கரைப்பற்று நீதிமன்ற கட்டிட பதிவேட்டு அறைக்கு தீவைத்த சம்பவம் தொடர்பாக கோளாவில் பகுதியைச் சேர்ந்த யாழ் ஆவா குறுப்புடன் இயங்கி வந்த   24 வயதுடைய ஒருவர் உட்பட 3 இளைஞர்களை ஹரோயின் போதைப் பொருளுடன் நேற்று புதன்கிழமை (28) நீலாவணை பகுதியில் வைத்து  கைது செய்துள்ளதாக  பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த 21 ம் திகதி அதிகாலை நீதிமன்ற கட்டிடத்திற்கு இனம்தெரியாதேரால் தீவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிரேஷ;ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸ குழுவினர் விசாரணைகளை முன்னெடு;துவந்தனர்.

இதன்போது நீதிமன்ற பகுதிகு;கு அருகிலுள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிரி கமரா மூலம் நீதின்ற கட்டித்திற்கு முகமூடி அணிந்தவாறு 3 பேர் நீதிமன்ற பகுதிகு;குள் உள்நுழைந்த வீடியோ காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணையில் நீலாவணை பகுதில் பதுங்கிருந்த அக்கரைப்பற்று கோளால் பகுதியைச் சேர்ந்த 24, 20, 17 வயதுடைய மூன்று பேரை  சம்பவதினமான நேற்று  புதன்கிழமை இரவு கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட 24 வயதுடையவருக்கு 9 நீதிமன்ற பிடிவிறாந்து உள்ளதுடன் இவர் யாழ் ஆவா குறுப்புடன் அங்கிருந்து செயற்பட்டு வந்துள்ளதாகவும் அவரின் நண்பர்களான 20,17 வயதுடைய அதேபகுதியைச் சேர்ந்தவர்கள் ஒன்றினைந்து இந்த தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இவ்வாறு கைது செய்தவர்களை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படு;த நடவடிக்கை எடுககப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews