
கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுவர், பெண்களிக்கான அபிவிருத்தி பணியில் ஈடுபடும் பெண்கள் வாழ்வுரிமைக் கழகம் எனும் அரச சார்பற்ற நிறுவனத்தில் முக்கிய ஆவணங்கள் திருடப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த திருட்டு சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த நிறுவனத்தின் மடிக்கணணிகள் இரண்டு, கணணி ஒன்று, கண்காணிப்பு காமராவின் DVR உள்ளிட்ட சுமார் 8 லட்சம் மதிக்கத்தக்க பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அலுவலகம் அமைந்துள்ள வீட்டின் கூரை ஊடாக உள்நுழைந்து இவ்வாறு திருடப்பட்டுள்ளது. குறித்த நிறுவனத்தால் பெண்கள், சிறுவர் பாதுகாப்பு மற்றும் அரசியல் உரிமைசார் விடயங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.