
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நாடகம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் போதைப் பொருள் பாவனையிலிருந்து விடுபட சமூகத்தை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீதி நாடக அரங்க நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், போதைப் பொருள் அற்ற பிரதேசத்தை உருவாக்க நோக்கிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
முதல் நாளான இன்று பன்னங்கண்டி பகுதியில் நடைபெற்றது. குறித்த பணிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

