கலட்டை பண்ணைகள் வேண்டும், புதிய அனுமதிகளையும் வழங்கு…! யாழ்.நகரில் கடற்றொழிலாளர்கள் போராட்டம்…!

கடலட்டை பண்ணைகளுக்கு ஆதரவு தொிவித்து யாழ்.கோட்டை பகுதியிலிருந்து யாழ்.நகரம்வரை கவனயீர்ப்பு பேரணி ஒன்று நடத்தப்பட்டுள்ளது. 

பேரணியில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், கடத்தொழில் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு அட்டை பண்ணைகள்  உதவுகின்றன,

தற்போதைய நாட்டின் பொருளாதார நெருக்கடியில் மக்களுக்கும் அந்நிய செலாவணியை பெற்றுக் கொடுக்கும் ஒரு தொழிலாக அட்டைப் பண்ணை உள்ளது.

சிலர் தமது குறுகிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக கடற்றொழில் மேற்கொள்ளாத சிலரும் அட்டைப்பண்ணையை விரும்பாத சிலரும் எதிர்கின்றனர்.

அட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கு சங்கங்களின் விருப்பமும் பெறப்பட்டே உரிய திணைக்களங்கள் ஊடாக அளவீடு செய்யப்பட்டு

அனுமதியுடன் பண்ணைகளை அமைத்துள்ளோம். அட்டைப் பண்ணைகளை வேண்டாம் என கூறுவோர் ஏன் வேண்டாம் என முதலில் மீனவ சங்கங்களுடன் பேச வரட்டும்

அதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கட்டும். யாழில் அட்டைப் பண்ணைகள் வேண்டுமென பலர் விண்ணப்பித்துள்ள நிலையில்

துறைசார்ந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விரைவாகப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆ

கவே ஒரு சிலரின் குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக மீனவ சமூகம் நன்மை அடைகின்ற அட்டைப் பண்ணைகளை

ஊக்கப்படுத்த வேண்டுமே தவிர தடுக்கக் கூடாது என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews