
2 வயதும் 8 மாதங்களும் நிரம்பிய பெண் குழந்தைக்கு தொலைபேசியில் ஆபாச படங்களை காண்பித்த குற்றச்சாட்டில் 19 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் சித்தியின் வீட்டில் தங்கி வாழ்ந்துவரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சித்தியின் 2 வயது 8 மாத பெண் குழந்தையை தனது மடியில் வைத்து கையடக்க தொலைபேசியில் ஆபாசப்படங்களை காட்டியுள்ளார்.
இதனை அவர்களது உறவினரான பெண் ஒருவர் கண்டு குழந்தையின் தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து குழந்தையும் தன் மீது மாமா இவ்வாறு நடந்து கொண்டதாக தாயாரிடம் தெரிவித்ததையடுத்து
சகோதரியின் மகனுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்ததையடுத்து அவரை நேற்று பொலிஸார் கைது செய்தனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட குழந்தையை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் கைதுசெய்யப்பட்டவரை நேற்று புதன்கிழமை (28) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது
அவரை எதிர்வரும் ஜனவரி 9 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்