மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக சட்டமா அதிபர் திணைக்கள செலிஸ்ரர் ஜெனரல் கருப்பிரியா ஜெயசுந்தர தலைமையிலான சட்டத்தரணிகள்குழு நேற்று வியாழக்கிழமை (29) மட்டக்களப்பு சீயோன் தேவாலயம், ஸாரனின் காசீமின் காத்தான்குடி பள்ளிவாசல், மற்றும் சாய்தமருது பகுதிகளுக்கு விஜையம் மேற்கொண்டு விசாரணையில் ஈடுபட்டனர்.
உயிர்த ஞாயிறு குண்டுதாக்குதல் தொடர்பாக கொழும்பு உயர் நீதிமன்றில் இடம்பெற்றுவரும் வழக்கினையடுத்து குண்டு தாக்குல்கள் நடந்;த இடத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொள்ளுவதற்காக சட்டமா அதிபர் திணைக்கள செலிஸ்ரர் ஜெனரல் தலைமையிலான குழுவினர் கிழக்கிற்கு விஜையம் மேற்கொண்டனர்.
இவர்கள் பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்புக்கு மத்தியில் முதலில் அம்பாறை சாய்தமருது வெரியேரியன் சுனாமி வீடமைப்பு திட்டத்தில் சாரானின் குழுவினர் பதுங்கியிருந்த வீட்டில் இடம்பெற்ற தற்கோலை குண்டுதாக்குதல் நடந்த வீட்டை சென்று பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டனர்
அதனைத் தொடர்ந்து காத்தான்குடியில் ஸாரானின் பள்ளிவாசல: மற்றும் அவர்கள் முதலில் மோட்டார்சைக்கிள் ஒன்றில் குண்டுதாக்குதல் நடாத்தி பயிற்சித்த காத்தான்குடி பாலமுனை மற்றும் சீயோன் தேவாலயத்திற்கு சென்று நேரடியாக பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதன்போது சம்பவ காலத்தில் விசாரணைகளை மேற்கொண்டு பதிவேட்டில் ஆவணங்களை தயாரித்த அந்தந்த பொலிஸ் பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் அதிகாரிகள் தடவியல் பிரிவு பொலிசார் சம்பவ இடங்களுக்கு அவணங்களுடன் வரவழைக்கப்பட்டு ஆவணங்களை பார்வையிட்டு சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டனர்.