தலைமன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பஸ்ஸில் இருந்து ஒரு தொகுதி ஐஸ் போதைப்பொருளை பேசாலை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
தலைமன்னாரில் இருந்து நேற்று (30) இரவு 7.30 மணியளவில் அரச பஸ் பயணிகளுடன் கொழும்பு நோக்கி பயணித்தது.
இதன் போது இரவு 8 மணியளவில் பேசாலை காவல்நிலையத்திற்கு முன்பாக பேசாலை காவல்துறையினர் குறித்த பேருந்தை இடை நிறுத்தி சோதனைக்கு உட்படுத்தினர்.
இதன் போது பேருந்தின் பின் ஆசனத்தின் இருக்கையின் கீழ் காணப்பட்ட பொதி ஒன்றை மீட்டனர். குறித்த பொதியை சோதனை செய்த போது ஐஸ் போதைப்பொருள் காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.
சுமார் 95 கிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பேசாலை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து பின் இருக்கையில் இருந்த பயணி ஒருவர் மற்றும் சாரதி, நடத்துனர் ஆகியோர் பேசாலை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணைக்கு உட்படுத்தினர்.
சுமார் 2 மணித்தியாலங்கள் விசாரணையின் பின் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.