யாழ்.மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் பதவி விலகும் நிலையில் மாநகரசபையை கலைப்பதா என்பது தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கேட்டிருப்பதாக மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் கூறியுள்ளார்.
மேலும் புதிய முதல்வரை தொிவு செய்வதற்கு யாழ்.மாநகரசபை கட்டளை சட்டம் இடம்கொடுக்காது எனவும் உள்ளுராட்சி ஆணையாளர் தொிவித்திருக்கின்றார். அதேபோல் மாநகரசபையை கலைப்பது தொடர்பான அதிகாரம் எனக்கு இல்லை
அது தொடர்பில், சட்டமா அதிபரிடம் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.