
அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் 2022 ஜனவரி முதலாம் திகதியிலிருந்து இலங்கை ரூபாவானது உலகின் நான்காவது தேய்மானம் அடைந்த நாணயமாக மாறியுள்ளது.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 49.17 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கி சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்க டொலருக்கு நிகரான உலகில் அதிக மதிப்பிலான நாணயம் ஜிம்பாப்வே டொலர் ஆகும். இதன் மதிப்பு மைனஸ் 77.78 சதவீதம் என்பதும் குறிப்பிடத்தக்கது.