கிளிநொச்சி மாவட்டத்தில் 2022/ 2023 காலபோக நெற்செய்கை மேற்கொண்டுள்ள ஒன்பதாயிரத்து நானூற்று நாற்பத்தி ஒன்பது விவசாயிகளுக்கு தலா பத்தாயிரம் ரூபா வீதம் அவர்களது வங்கி கணக்குகளில் நேற்று(30.12.2022) வைப்பிலிடப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் பா.தேவரதன் தெரிவித்துள்ளார்.
2022/2023 காலபோக நெற்செய்கை மேற்கொண்டுள்ள குறைந்த வருமானம் பெறும் விவசாயக் குடும்பங்களுக்கு கொடுப்பனவுகளை வழங்கும் அரசின் கொள்கைகளுக்கு அமைவாக நேற்று கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கான கொடுப்பனவுகள் வங்கிகளில் வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் பா.தேவரதனை தொடர்பு கொண்டு கேட்டபோது, கிளிநொச்சி மாவட்டத்தில் முதற்கட்டமாக 12 ஆயிரத்து 707.2 ஹெக்டேயர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொண்டுள்ள ஒன்பதாயிரத்தி நானூற்று நாற்பத்தி ஒன்பது விவசாயிகளுக்கு தலா பத்தாயிரம் ரூபா விதம் 127.072 மில்லியன் ரூபாய் நிதி விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.