
புத்தாண்டுக்கு புடைவை கொள்வனவு செய்யச் சென்ற தாயும்,மகளும்நேற்றிரவு கோர விபத்தில் பலியான துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. நீர்கொழும்பு பகுதியில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முச்சக்கர வண்டியும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் நீர்கொழும்பைச் சேர்ந்த 45 வயதுடைய தாயும், 17 வயதுடைய மகளுமே உயிரிழந்தவர்களாவர்.
புத்தாண்டுக்கு ஆடைகளை கொள்வனவு செய்ய மோட்டார் சைக்கிளில் சென்றவேளை இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதியும், அதில் பயணித்த இருவரும் காயமடைந்த நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.