
அரசாங்க ஊழியர்களுக்கு விசேட முற்பணம் வழங்குவது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு விசேட சுற்றறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இந்த நடவடிக்கை இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது.
இதன்படி, 2023 ஆம் ஆண்டில் அரசாங்க ஊழியர்களுக்கு அதிகபட்சமாக 4,000 ரூபாவுக்குட்பட்ட தொகையை முற்பணமாக செலுத்துமாறு அனைத்து அமைச்சுக்களுக்கும், உள்ளூராட்சி மற்றும் திணைக்களங்களின் தலைவர்களுக்கும் பொது நிர்வாக அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
2015 டிசம்பர் 29 ஆம் திகதியிட்ட சுற்றறிக்கையின்படி, முற்பணத்தை ஏற்பாடு செய்யுமாறு பொது நிர்வாக அமைச்சு, நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
முற்பணம் வழங்கல் இன்று முதல் 28.02.2023 ஆம் திகதிக்குள் நிறைவு செய்ய வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
28.02.2023 ஆம் திகதிக்கு பின்னர் முற்பனம் பணம் செலுத்தக் கூடாதென்றும், 2023ஆம் ஆண்டுக்குள் இந்த முற்பணம் முழுமையாக அறவிடப்பட்ட வேண்டுமென்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.