
கிளிநொச்சி பொலீஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் கிராமத்தில் 26 வயது இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்டுள்ளான்.
குறித்த சம்பவம் இன்று (01) அதிகாலை 4 மணியளவில் வீடு புகுந்த நபர்கள் 26 வயதுடைய தவக்குமார் சுரேஸ் என்ற இளைஞனை கத்தியால் குத்தியும், பலமாக தாக்கியுமுள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் அயலவர்கள்
மற்றும் உறவினர்களால் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் வழியிலேயே உயிரிழந்தள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக பூர்வாங்க விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.