இலங்கை முதலுதவிச் சங்கம் மற்றும் இந்து சமய தொண்டர்சபையினரால் ஒரு கோடி தாவரங்கள் நாட்டிவைக்கும் நிகழ்வு கைதடி கற்பக விநாயகர் ஆலய வளாகத்தில் இன்று காலை 11:30 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை முதலுதவி சங்க தேசிய ஆணையாளர் வை.மோகனதாஸ் தலமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் முதல் நிகழ்வாக ஆலயத்தில் சிறப்பு பூசைகள் இடம் பெற்றன. தொடர்ந்து ஒரு கோடி தாவரங்கள் நடுகை திட்டம் சம்பிர்தாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இதில் ஆசி உரையினை கவிஞாரும் அர்ச்சகருமான சிவசிறி குமார சுவாமி நாதக் குருக்கள், இலங்கை முதலுதவி சங்க நிர்வாக திட்டமிடல் பிரிவு ஆலோசகரும் சமூக செயற்பாட்டாளருமான அன்பரசன்,
சமூக செயற்பாட்டாளர் ஜெயராச சிங்கம், இலங்கை முதலுதவி சங்க மகளீர் அணி பொறுப்பாசிரியர் த.கேதீஸ்வரி, இலங்கை முதலுதவிச் சங்கம்,இந்துசமய தொண்டர்சபை கண்காணிப்பாளர் வை.ஜெகதாஸ், கைதடி கற்பக விநாயகர் ஆலய தர்மகத்தா, நிதிப்பங்காளியான முந்நாள் இலங்கை முதலுதவி சங்க உறுப்பினரும், சமூக செயற்பாட்டாளருமான விஜயனின் குடும்பத்தினர், சாவகச்சேரி பிரதேச செயலய உதவி திட்ட பணிப்பாளர் இ.சர்வேந்திரன், இலங்கை முதலுதவி சங்க தொண்டர்கள், கண்காணிப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டு மரங்கள் மற்றும் தாவரங்களை நாட்டிவைத்தனர்.