இந்த நாட்;டிலே 37 ஆண்டுகளுக்கு முன்பதாக பேனா முனை போராளியாக இருந்து இந்த நாட்டிலே இருந்த அடக்குமுநைகள் எல்லாம் வெளிக் கொண்டு வந்ததன் காரணமாக ஜனநாயகத்துக்கு விடுக்கப்பட்ட முதலாவது ஊடகவியலாளர் படுகொலையாக கணவதிப்பிள்ளை தேவராஜாவின் படுகொலையை பார்க்கின்றதுடன் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு ஒரு நிலையான தீர்வு கிடைக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய தலைவர் க.சரவணன் ஏற்பாட்டில் முதலாவதாக படுகொலை செய்யப்பட்ட க.தேவராஜாவின் 37 வது நினைவேந்தல் ஆலையடிவேம்பு இந்துமாமன்ற மண்டபத்தில்; நேற்று சனிக்கிழமை (31) இடம்றெ;றது இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எங்களுடைய தமிழ் மக்கள் தொடர்ச்சியாக இந்த நாட்டு அரசாங்க அரசபடைகள் தொடர்ச்சியாக துன்புறத்தல் அடக்கு முறைக்கு எதிராக கூடுதலாக எமது ஊடகவியலாளர்களே வெளியிக் கெண்டுவரும் சக்திகளாக இருந்திருக்கின்றனர். அது அரசுக்கு பெரும் சவாலாக இருந்திருக்கின்றது
அவர்கள் பொய் உரைக்கின்ற உண்மையை மறுதலிக்கின்ற செயற்பாடுகளை முன்னெடுத்த செயற்பாடுகள் காரணமாக இதை வெளியில் கொண்டுவருபவர்கள் ஊடகவியலாளர்கள் காரணமாக அவருக்கு மரணதண்டனையை அவர்கள் வழங்கியிருந்தார்கள்.
குறிப்பாக இந்த நாட்டிலே 44 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர் அதில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 5 பேர் அதில் சுகிர்தராஜன், நடேசன், சிவராம், இரத்தினசிங்கம், இவ்வாறு பட்டியல் இட்டுச் செல்லலாம் இவ்வாறு பொரும்பாலன ஊடகவியலாள்கள் படுகொலை செய்யபப்பட்டுள்ளனர்.
இன்று எவ்வாறான தமிழருக்குரிய போராட்டங்களை முன்னெடுத்துள்ளானாலும் பெரும்பான்மை சமூகத்தினால் எமது சமூகத்துக்குரிய தீர்வு கிடைக்கவில்லை என்பதுதான் எமது மனஆதங்கம்.
இந்த நாடு தொடர்ச்சியாக வன்முறை நிறைந்;த நாடாகவே இருந்து கொண்டிருக்கின்றது உலகத்திலே ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்காக பல திட்டங்கள் நடைமுறைகளை அமைப்புக்கள் கையாண்டாலும் இலங்கையில் அது விதிவிலக்காக இருக்கின்றது.
ஊடகவியலாள்கள் அவர்களது உயிரை துர்ச்சமாக மதித்து உண்மைக்கு உண்மையான சம்பவங்களை மிகவும் கட்சிதமாக வெளிக் கொண்டுவந்தனர் அதன் காரணமாக இந்த மண்ணை நேசித்த மண்ணுக்கு உரித்தான கணவதிப்பிள்ளை தேவராஜா முதலாவதாக படுகொலை செய்யபபட்டவர் அவர் தமிழன் என்ற காரணத்தால்
அம்பாறை தமிழ் ஊடகவியலாள் ஒன்றியம் இவரின் நினைவேந்தலை பல தடவைகள் செய்துள்ளது என்பதுடன் இப்போது சாதாரண சூழல் இருப்தால் நாங்கள் வாழ்ந்துவிடலாம் என்பதை விடுத்து இந்த தேவராஜான் கொலை செய்யப்பட்டார் அதற்கு என்ன காரணம் என்றதை இளம்சமூதாயம் அறியவேண்டும்.
இப்போது எமது சமூகம் எதை செய்யவேண்டும் என்றது தெரியாத நிலை உருவாகிக் கொண்டிருக்கின்றது எனவே நாங்கள் நாங்களாகவே எமது சமூகத்தின் எதிர்கால இருப்பு சம்மந்தமாக ஒன்றுபட்டுச் செயற்படவேண்டிய காலம் இது ஏன் என்றால் இப்போது இனப்பிரச்சனைக்கு அப்பால் பொருளாதார பிரச்சனை மேலோங்கி ஒவ்;வொரு அரசியல் தலைவர்களும் பொருளாதார பிரச்சனையைதான் பேசுகின்றனர்.
இந்த பொருளாதார பிரச்சனைக்கு அடித்தளமாக இருந்தது இந்த நாட்டிலே இருக்கின்ற இன ரீதியான பிரச்சனை என்பதை மறந்துவிடுகின்றனர் என்றார்.