விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் செயற்திட்டத்தின் கீழ் அவுஸ்திரேலியன் எயிட் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் உள்ளூர் பெண் சுய தொழில் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்க்காக திருநெல்வேலி அம்மாச்சி உணவகத்துக்கு அருகாமையில் நிறுவப்பட்ட சஞ்சீவி மாதர் உள்ளூர் உற்பத்தி விற்பனை நிலையமானது விழுது நிறுவன திட்ட ஆலோசகர் கந்தசாமி ஐங்கரன் மற்றும் திட்ட உத்தியோகத்தர் வேந்தன் சர்மிளா ஆகியோரால் நேற்று முன் தினம் (31/12/2022) யாழ் மாவட்ட பெண்கள் சமாசத்திடம் கையளிக்கப்பட்டது.
குறித்த விற்பனை நிலையத்தில் 60 மேற்பட்ட பெண் உற்பத்தியாளர் தங்களுடைய உற்பத்தி பொருட்களை விற்பனை செய்து வருகின்ற நிலையிலேயே குறித்த சஞ்சீவி மகளிர் விற்பனை நிலையம் யாழ் மாவட்ட பெண்கள் சமாசத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் விழுது நிறுவன அதிகாரிகள், தொண்டர்கள், யாழ் மாவட்ட பெண்கள் சமாச பிரதிநிதிகள், பெண் உற்பத்தியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.