
மாத்தறை கடலில் நீராடிய 17 வயதுடைய இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
கடலில் குளித்துக் கொண்டிருந்த நான்கு சிறுவர்கள், நீரோட்டத்தில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்டனர்.
எனினும் அவர்களில் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் அக்குரஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பிரத்யேக வகுப்புகளுக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து கடலுக்கு நீராடச்சென்றதாக கூறப்படுகிறது.