பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிப்பதற்கு தயார்படுத்தப்பட்ட போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் வெல்லம்பிட்டி பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெல்லம்பிட்டி மற்றும் சேதவத்தை ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடமிருந்த 80 போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
62 வயதுடைய இந்த சந்தேக நபர் நீண்டகாலமாக பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விநியோகம் செய்து வந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.