
மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லம் இராணுத்தினரால் ஆக்கிரமிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது!
இதன் முத்தாய்ப்பாக துயிலும் இல்லத்தில் இராணுவ புலனாய்வாளர்களினால் திட்டமிடப்பட்ட வகையில் சில நடவடிக்கைகள் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
இதனை கண்டிக்கும் முகமாக நாளை பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கு மக்கள், அரசில்வாதிகள் என அதிகளவில் பங்கெடுக்க வேண்டும் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகமுமான M.K.சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.