
இத்தாலியைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள் பயணம செய்த வாகனம் மீது காட்டு யானையொன்றினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ரன்தெனிகல பெனிகல என்னும் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் பயணம் செய்த வாகனம் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வாகனம் புரண்டு வீழ்ந்த போதிலும் அதில் பயணம் செய்த இத்தாலிய தம்பதியினருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
எல்ல பிரதேசத்திற்கு சென்று அங்கிருந்து கண்டி நோக்கிப் பயணம் செய்த போது இடைநடுவில் இவ்வாறு காட்டு யானைத் தாக்குதல் நடத்தியுள்ளது.