
கிளிநொச்சி பாரதி மகாவித்தியாலயத்தின் புதிய கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று காலை 12 மணியளவில் பாடசாலை முதல்வர் பி.சிறிதரன் தலைமையில் இடம்பெற்று.
இதன் போது, குறித்த கட்டடத்தை வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன திறந்துவைத்தார்.
குறித்த நிகழ்வில், வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண கல்வி கல்வி பணிப்பாளர், கிளிநொச்சி கல்விப் பணிப்பாளர், பாடசாலை சமூகத்தினர் என பலர் கலந்து கொண்டனர்.

