
லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை தொடர்பில் லிட்ரோ நிறுவனம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய நாளை முதல் 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 200 முதல் 300 ரூபாவுக்கு இடையில் குறைவடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை வௌியாகவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.