
மாகாண குறித்து ஒதுக்கப்பட்ட நிதியில் அமைக்கப்பட்ட வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலய கட்டடம் திறந்துவைக்கப்பட்டது.
வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தில் வடக்கு மாகாண சபையின் குறித்து ஒதுக்கப்பட்ட நிதியின் ஊடாக அமைக்கப்பட்டு இன்று காலை 9 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு.எஸ்.எம்.சமன் பந்துலசேன, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன், வடக்கு மாகாண கல்வி கல்வி பணிப்பாளர் ஜோன் குயின்ஸ்டன் மற்றும் வடக்கு மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் எந்திரி சுதாகரன் ஆகியோர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை வைபவ ரீதியாக திறந்து மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வாறு இரண்டு பாடசாலைகளுக்கு 27 மில்லியன் ரூபா பெறுமதியில் ஒதுக்கப்பட்டு அமைக்கப்படட புதிய வகுப்பறை கட்டிடங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




