
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவரை சந்தித்தார்.
முன்னாள் ஜனாதிபதி கௌரவ. மகிந்த ராஜபக்ச தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கௌரவ. இரா.சம்பந்தனின் உடல் நலம் விசாரிப்பதற்காக அவரது இல்லத்திற்கு (1.4.2023) விஜயம் செய்தார்
வடக்கு, கிழக்கில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தமிழ்த் தேசியப் பிரச்சினைகளை முன்வைத்த சம்பந்தன், வடகிழக்கு பிரச்சினைக்கு அரசாங்கம் விரைவில் தீர்வு காண வேண்டும் என்றார்.
சம்பந்தன், பிரச்சினைகளை அதிமேதகு ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்துடன் கலந்துரையாடி சுமுக தீர்வை எட்ட முயற்சிப்பேன்என தெரிவித்தார்.
தமிழ்க் கட்சிகளின் கவலைகள் குறித்து விவாதிப்பதற்காக விரைவில் நடைபெறவுள்ள மூன்று நாள் சர்வகட்சி மாநாட்டில் தனது கட்சியான SLPP கலந்துகொள்ளும் என்றும், அதன்பின் அதன் முன்மொழிவுகளை நேர்மறையான முறையில் ஆய்வு செய்யும் என்றும் கூறினார்.