தமிழ் தேசிய கூட்டமைப்பு, மற்றும் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி போன்ற கட்சிகளை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் என்று அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பொது செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
அவர் நேற்று தனது அலுவலகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது தொடர்ச்சியாகவே மாறி மாறி வருகின்ற அரசுகளுக்கு முண்டு கொடுத்துக் கொண்டு தமிழ் மக்களுக்கு தேசியவாதிகளாக காட்டிக் கொண்டிருக்க கூடிய தமிழ் தேசிய கூட்டமைப்பு, மற்றும் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி போன்ற கட்சிகள் தேர்தல் வருகின்றபோது நல்லவர்களாக நடித்து, மக்களுக்கு தம்மை தேசியவாதிகளக தொடர்ந்தும் அடையாளம் காட்டிக் கொண்டு வருகிறார்கள். இவ்வாறான தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி போன்றவற்றை நிராகரிக்க வேண்டும் என்றும். இதே வேளை பதிமூன்றாவது திருத்தச் சட்டத்தையும் முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று இந்தியாவினுடைய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியவர்கள் இன்று தமிழ் தமிழ் தேசிய வாதிகளாக இப்போது தேர்தல் வரும் என்ற நிலை உருவாக சமஸ்டி, பற்றி பேசுகிறார்கள் என்றும் குகுற்றம் சுமத்தியதுடன் கடந்த காலங்களில் தமிழ் மக்கள் குறித்த கட்சிகளை நிராகரித்தது போன்று இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் மக்கள் நிராகரிக்க வேண்டும் என்றும் தெரிவித்ததுடன் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு மக்கள் ஆட்சி முறை ஒன்று தேவை என்று அதற்கு உள்ளூராட்சி மன்ற தேர்தல் முக்கியம் இல்லை என்றும், பாராளுமன்ற தேர்தலே அரசு நடத்தி இருக்க வேண்டும் இதனால் தான் மக்கள் தங்களுடைய நிலைப்பாட்டை அல்லது அபிலாசைகளை தெரிவிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்