– இவ்வாறு இசைக் கலைஞர் இராஜ் வீரரத்ன தெரிவித்தார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் பதவியை இராஜிநாமா செய்தது தொடர்பாக ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“பதவியை இராஜிநாமா செய்யக் கோரி நாமல் ராஜபக்ஷவோ, யோசித ராஜபக்ஷவோ எனது கன்னத்தில் அறையவில்லை.
இந்த அரசில் உள்ளவர்கள் பைத்தியக்காரத்தனமாகச் செயற்படுகின்றனர்.
நாட்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏதாவதொரு மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று நான் தொடர்ந்தும் நம்புகின்றேன்.
மக்கள் விடுதலை முன்னணியினர் எனக்கு எதிராகவும் அரசுக்கு எதிராகவும் பல்வேறு போலிப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் இருந்து நான் விலகினாலும், எதிர்கால வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவேன் என்று நாமல் ராஜபக்ஷவிடம் தெரிவித்த்தேன்.
நான் தொடர்ந்து இசைத்துறையில் கவனம் செலுத்தவுள்ளேன்” – என்றார்.